ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எதற்கும் மின்சாரம் வழங்கக் கூடாது- கனிமொழி..!

சமீபத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என கூறியிருந்தார்.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதைதொடர்ந்து, ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை வழங்கியது. இதனால், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்கக் கூடாது. மாவட்ட, மாநில அளவில் குழு அமைத்து இந்த ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழக அரசின் அனுமதியில்லாமல் பிற மாநிலங்களுக்கு தரக்கூடாது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க விசிக, அமமுக, மதிமுகாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025