ஸ்டெர்லைட் ஆலை இரு மாதங்களில் திறக்கப்படும்…!ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் அறிவிப்பு…!

Published by
Venu

ஸ்டெர்லைட் ஆலை 2 மாதங்களில் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது.
பின்  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக  வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு டிசம்பர் 10 ஆம் தேதி ஒத்திவைப்பதாக பசுமைத்தீர்ப்பாயம் தெரிவித்தது.இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.அதில் நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை.தூத்துக்குடியில் மோசமான நிலைமைக்கு நிலத்தடி நீர் செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை. நிலத்தடி நீர் மாசு காரணமாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டது என்று தெரிவித்தது.அதற்கு
2014 – 2018 வரை நோட்டீஸ் எதுவும் அனுப்பப்பட்டதா? என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கில் விசாரணை நிறைவுபெற்றது.
Image result for ஸ்டெர்லைட்
 
இந்நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
அதேபோல் 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு  பிறப்பித்தது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
பின் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்க வேண்டும்.தங்களது வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என்று தெரிவித்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறுகையில்,ஸ்டெர்லைட் ஆலை 2 மாதங்களில் திறக்கப்படும்.இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மேலும் ஸ்டெர்லைட் தொடர்பாக மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் கேட்ட பிறகே பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது என்றும் ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.

Recent Posts

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

24 minutes ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

46 minutes ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

1 hour ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

12 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

12 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

13 hours ago