ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் : 19 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்..!!

Default Image
Image result for ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தசென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 10 வாரிசுதாரர்களுக்கும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 5 நபர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசு தாரர்களுக்கும், என மொத்தம் 19 நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இது குறித்து அரசு செய்திக்குறிப்பு வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 27.5.2018 அன்று உத்தரவிட்டிருந்தவாறு காசோலை வழங்கப்பட்டது. மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் ஆணையிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து  மொத்தம் 18 நபர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை நேரில் வழங்கி ஆறுதல் கூறினார். முதலமைச்சரிடமிருந்து பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்கள், தங்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிதியுதவிகளையும், தேவையான நிவாரண உதவிகளையும், மருத்துவ வசதிகளையும் வழங்கியதோடு, குறுகிய காலத்தில் வேலைவாய்ப்பு ஆணை வழங்கியமைக்காக, முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்