ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி குழுவிற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.அதைத்தொடர்ந்து தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட 3 பேர் கொண்ட குழு செப்டம்பர் 22 ஆம் தேதி மாலை தூத்துக்குடி வந்தடைந்தனர்.
இதன் பின்னர் செப்டம்பர் 23 ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட 3 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வை தொடங்கினார்கள்.இதன் பின்னர் ஸ்டெர்லைட் குறைகள் தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்பு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதன் பின்னர் சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய கூடுதல் கால அவகாசம் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதைவிசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி குழுவிற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதாவது 1 மாதம் கூடுதலாக கால நீட்டிப்பு வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் நவம்பர் 30 வரை ஓய்வு பெற்ற நீதிபதி அகர்வால் குழு ஆய்வு செய்ய அவகாசம் வழங்க்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…