ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மீண்டும் விசாரணைக்கு வருகிறது
- ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரி மனுதாக்கல் செய்தது.
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு:
டிசம்பர் 15 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும்.தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
அதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.கே.எஸ்.அர்ஜுனன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத் மற்றும் சுப்பு முத்துராமலிங்கம் ஆஜரானார்கள்.அதில், இந்த ஆலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இந்த ஆலையை திறக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் ஆலை பராமரிப்பு தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது.அதேபோல் ஸ்டெர்லைட் ஆலை மனு தொடர்பாக தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.இதனால் வழக்கின் விசாரணை வருகின்ற மார்ச் 27-ம் தேதி நடைபெறுகிறது.