தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை, என்ற தமிழ் நாடு அரசின் முடிவிற்கு நன்றி.
கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைகிறது.
இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதனையடுத்து, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில், வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில், தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கனிமொழி எம்.பி., இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தமிழ் நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை, என்ற தமிழ் நாடு அரசின் முடிவிற்கு நன்றி. தமிழ் நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…