நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று முதலமைச்சர்
அமைச்சரவைத் தீர்மானம் இயற்றி சட்டமாக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.மக்களின் நலனிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் நீதித்துறை வைத்துள்ள நன்மதிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.
ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களை கொடூரமாகப் பறித்த அதிமுக அரசின் மாபாதகச் செயலை தமிழக மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை . தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி. தமிழகத்தின் எதிர்ப்பால் வேறு வழியின்றி ஸ்டெர்லைட் ஆலையை அதிமுக அரசு மூடிய போது திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ‘ அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை கொள்கை முடிவாக எடுங்கள் ‘ என்று வலியுறுத்தியிருக்கிறோம்.
அந்தக்கோரிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது.முதலமைச்சர் திரு பழனிசாமி இன்றே தமிழக அமைச்சரவையைக் கூட்டி – தீர்ப்பை வரவேற்று அமைச்சரவை தீர்மானமாகவே வெளியிட வேண்டும் – அதை ஒரு சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும்.ஆலையின் தரப்பில் மேல் முறையீடு செய்தால் – தமிழக அரசு கேட்காமல் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை ஏதும் விதிக்கப்படாமலிருக்க உச்சநீதிமன்றத்தில் ‘கேவியட் மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…