ஸ்டெர்லைட் தீர்ப்பு ! தீர்மானம் இயற்றி சட்டம் இயற்ற வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Default Image

நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று முதலமைச்சர்
அமைச்சரவைத்  தீர்மானம் இயற்றி சட்டமாக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.மக்களின் நலனிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் நீதித்துறை வைத்துள்ள நன்மதிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.

ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களை கொடூரமாகப் பறித்த அதிமுக அரசின் மாபாதகச் செயலை தமிழக மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை . தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி. தமிழகத்தின் எதிர்ப்பால் வேறு வழியின்றி ஸ்டெர்லைட் ஆலையை அதிமுக அரசு மூடிய போது திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ‘ அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை கொள்கை முடிவாக எடுங்கள் ‘ என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

அந்தக்கோரிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது.முதலமைச்சர் திரு பழனிசாமி இன்றே தமிழக அமைச்சரவையைக் கூட்டி – தீர்ப்பை வரவேற்று அமைச்சரவை தீர்மானமாகவே வெளியிட வேண்டும் – அதை ஒரு சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும்.ஆலையின் தரப்பில் மேல் முறையீடு செய்தால் – தமிழக அரசு கேட்காமல் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை ஏதும் விதிக்கப்படாமலிருக்க உச்சநீதிமன்றத்தில் ‘கேவியட் மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்