ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதி கிடையாது ! உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது – ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்
ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்று ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ பங்கஜ்குமார் தெரிவித்துள்ளார்.
வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ பங்கஜ்குமார் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. உறுதுணையாக இருப்போர் அனைவருக்கும் நன்றி.25 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இன்றி ஸ்டெர்லைட் இயங்கி வந்திருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.ஸ்டெர்லைட்டை சார்ந்த பலருக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாக உள்ளது .ஸ்டெர்லைட் ஆலையை சார்ந்திருந்த 50,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.