மாசு கட்டுப்பாட்டு வாரியம்… தான் ஸ்டெர்லைட்டுக்கு உதவியது..!வைகோ பரபரப்பு தகவல்..!!
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு உதவியது என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும் என கோரிக்கையுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை விசாரிக்கும் மூவர் குழுவான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வாலா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விஞ்ஞானி சதீஸ்.சி. கர்கோட்டி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கூட்டத்தில் கேட்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் அப்துல் சலீம், தூத்துக்குடி பேராசிரியர் பாத்திமா, திமுக முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் தரப்பு மனுக்களை அளித்தனர்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சார்பிலும் இந்த மூவர் குழுவிடம் மனு அளிக்கப்பட்டது.இந்நிலையில் இது குறித்து தெரிவித்த வைகோ மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தான் ஸ்டெர்லைட்டுக்கு உதவியது என்று பகீரங்க தகவலை தெரிவித்துள்ளார்.மேலும் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்று குழுவிடம் தெரிவித்துள்ளோம் என்று கூறினார்.
DINASUVADU