ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது ..! அமைச்சர் ஜெயக்குமார்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், திரைத்துறையினர் ஒற்றுமையாக இருந்தால் அரசு தலையிட வேண்டிய தேவையில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருக்கவே நடவடிக்கை எடுத்தோம்.ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.”தூத்துக்குடி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளித்து வருகிறது” என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.