ஸ்டெர்லைட் வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை…!

Default Image

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு இன்று  விசாரணைக்கு வருகிறது. 

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசனை வெளியிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஐவர் குழுவை அமைத்து, 6 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் ஆய்வு செய்தனர். அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 30-ம் தேதி முடிவடைந்தநிலையில், வல்லுநர் குழு சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதனை ஏற்ற பசுமைத் தீர்ப்பாயம், நவம்பர் 30-ம் தேதி ஆய்வறிக்கையை சமர்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.இதையடுத்து, சீலிடப்பட்ட 42 கவர்களில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கையை ஐவர் குழுவினர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.

நவம்பர் 28 ஆம் தேதி  ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடங்கியது. தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.இதில் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது.ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது.ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பாமல் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு.ஸ்டெர்லைட் ஆலையை முடியதற்கு தமிழக அரசு கூறிய காரணம் ஏற்புடையதல்ல என்று தருண் அகர்வால் விசாரணை ஆணையம் தெரிவித்தது.தொடர்ந்து ஸ்டெர்லைட் தரப்பில் ஸ்டெர்லைட் வழக்கை அடிக்கடி ஒத்திவைக்க கூடாது என்று வாதாடப்பட்டது.இந்த விசாரணை அறிக்கை தொடர்பான ஆய்வறிக்கைக்கு தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இந்த வழக்கை டிசம்பர் 7ஆம் தேதி   ஒத்தி வைத்தது பசுமைத்தீர்ப்பாயம்.

இதன் பின்னர்  விசாரணைக்கு வந்தது.இதில் தமிழக அரசு தரப்பில் பதில் தரப்பட்டது.அதில் அரசாணை செல்லாது என்று அறிவித்த அகர்வால் அறிக்கையை ஏற்க முடியாது.ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றத்தில் மட்டுமே எதிர்கொள்ள முடியும். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசின் அரசாணையை எதிர்க்க முடியாது.தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு இன்று  ஒத்திவைப்பதாக பசுமைத்தீர்ப்பாயம் தெரிவித்தது.இதனையடுத்து இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வருகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்