போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ் ராஜ், மைக்கேல் ஜீனியஸ் மீது தொடரப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகல்களை தாக்கல் செய்ய மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு பரிந்துரை செய்ததையடுத்து தூத்துக்குடியில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.அதோடு இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பரிந்துரையை நிராகரிக்க முடியாது என்று சமீபத்தில் உத்தரவு வெளியிட்டது. வருகின்றது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய்வழக்கு போடுவதை நிறுத்த கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது , கடந்த 3 மாதங்களில் போராட்டம் நடத்த அனுமதி கூறியவர்கள் எவ்வளவு பேர் என்று விவரங்களை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி அளிக்க வேண்டுமென்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆஜரானார்.பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை,ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசினாலோ, சமூக வலைதளத்தில் தகவல் அனுப்பினாலோ குற்றம் என்றால், ஸ்டெர்லைட் ஆலையை திறப்போம் என பேசுவதும், சமூக வலைதளங்களில் தகவல் அனுப்பவதும் குற்றம் தானே? என்றும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போடக்கூடாது கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் போராட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? என்றும் போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ் ராஜ், மைக்கேல் ஜீனியஸ் மீது தொடரப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகல்களை தாக்கல் செய்ய மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .அதேபோல் வழக்கு வரும் 14க்கு ஒத்திவைத்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…