தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறக்க வேண்டுமே என்ற மனு விசாரணையும் , ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ சார்பில் இந்த ஆலையை திறக்க கூடாது என்ற மனுவும் சேர்த்து விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இந்த நிறுவனம் திறந்தாள் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுமென்றும் , வைகோ சார்பில் இந்த ஆலையின் விதிமீறல்கள் குறித்தும் , ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் இந்த ஆலை கடைபிடிக்கும் விதிமுறைகள் மற்றும் செய்யும் நலத்திட்ட உதவிகள் குறித்து வாதம் செய்யப்பட்டது.
இதையடுத்து மூன்று தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் அனைத்து தரப்பினரும் தங்களின் வாதங்களை எழுத்துபூர்வமாக திங்கள் கிழமைக்குள் அளிக்க வேண்டுமென்று கூறி தீர்ப்பை ஒத்து வைத்தது.
சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…