ஸ்டெர்லைட் ஆலையை, எவ்வித தாமதமும் இன்றி, உடனடியாக மூட நடவடிக்கை?
தூத்துக்குடி அதிமுக எம்.பி ஜெயசிங் நட்டர்ஜி ஸ்டெர்லைட் ஆலையை, எவ்வித தாமதமும் இன்றி, உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார்.
மக்களவையில் பேசிய அவர்,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூட ஏற்கனவே, உத்தரவிட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால், போபால் விஷவாயு கசிவு போன்ற சம்பவம், தூத்துக்குடியிலும் நிகழக்கூடும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். எந்தவித பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாமல், லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு ஸ்டெர்லைட் ஆலையை விளையாடிக் கொண்டிருப்பதாகவும், எனவே, உடனடியாக ஆலையை மூட வேண்டும் என்றும் தூத்துக்குடி அதிமுக எம்.பி. ஜெயசிங் நட்டர்ஜி வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.