நடைப்பயணத்தின் போது பனைத்தொழிலாளர்களுடன் உரையாடிய அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள ‘என் மண் என் மக்கள்’ எனும் பாதயாத்திரை நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த நடைபயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார்.
இன்று இந்த நடைபயணத்தின்போது அண்ணாமலை, ராமநாதபுரத்தில் உள்ள பனை தொழிலாளர்களுடன் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, பனை மரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மதிப்புமிக்கவை, இதன் மூலமாக பனை தொழிலாளர்களின் தரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பனங்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் கொண்டுவரவும், பனையிலிருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் மக்களுக்கு கிடைக்கும் வகையிலும், கருப்பட்டி போன்ற இனிப்பு பொருட்களை ரேஷன் கடைகளிலும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அண்ணாமலை மேலும் கூறினார்.
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…