பத்திர பதிவு கட்டணத்தை குறைக்க முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்- பன்னீர்செல்வம்
பத்திர பதிவு கட்டணத்தை குறைக்க முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பத்திர பதிவு கட்டணத்தை குறைக்க முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் வீட்டு வசதி வாரியம் மூலம் தனியாருக்கு நிகராக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் கட்டுமான துறையில் ஒற்றை சாளர முறையில் வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை வீட்டு வசதி வாரியம் மூலமாக 13 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கபட்டு, 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.