இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்றே நிதி வழங்க நடவடிக்கை!
இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்றே நிதி வழங்க நடவடிக்கை.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்த கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கான ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஒரு சில மாற்றுத்திறனாளிகள் இருப்பிடம் மாறி வசிப்பதாகவும், அவர்கள் நிவாரணம் பெறுவதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், மாவட்ட ஆட்சியர்களுக்கும்கடிதம் அனுப்பியுள்ளது.