தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வரமால் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை- தமிழக அரசு!
வடமாநிலங்களில் பயிர்களை கொத்துக்கொத்தாக பதம்பார்த்து வரும் வெட்டுக்கிளிகள், தமிழகத்திற்குள் வராமல் தடுக்கு முழுவீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை பதம்பார்த்து வருகின்றனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு, மே மாதம் தொடங்கிய இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பால், ராஜஸ்தானில் சுமார் 7 லட்சம் ஏக்கர் ஹெக்டேர் விளை பயிர்கள் சேதமானது.
இந்நிலையில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் வராமல் தடுப்பதற்கு முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது.