கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்…!
தமிழகத்தில் ஜூலை 12-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஜூலை 19-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
- கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
- குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை கடைகளில் அனுமதிக்கக்கூடாது.
- கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையாக காத்திருக்கும் போது, ஒரு நபருக்கு மற்றோருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு..!#tnlockdown | #TNGovt | #lockdownextension | #mkstain | #LockDown pic.twitter.com/ReL2L92w78
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 10, 2021