தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் – மத்திய நிதியமைச்சர்.
ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். முதல் கட்ட அறிவிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்துவற்கான திட்டங்களை அறிவித்திருந்தார். இதையடுத்து 2 ம் கட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார்.
இந்த மூன்றாம் கட்ட அறிவிப்பில் தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பகுதிகளில் பிரபலமான விவசாய பொருட்களை கண்டறிந்து அவற்றின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் விவசாயப் பொருள்கள் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தும் செய்யப்படும். மாநிலங்களுக்கு இடையே விளைபொருள்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…