தமிழகத்தில் விளையும் மரவள்ளிக்கிழங்கு சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை.!

Default Image

தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் – மத்திய நிதியமைச்சர்.

ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். முதல் கட்ட அறிவிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்துவற்கான திட்டங்களை அறிவித்திருந்தார். இதையடுத்து 2 ம் கட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார். 

இந்த மூன்றாம் கட்ட அறிவிப்பில் தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பகுதிகளில் பிரபலமான விவசாய பொருட்களை கண்டறிந்து அவற்றின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் விவசாயப் பொருள்கள் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தும் செய்யப்படும். மாநிலங்களுக்கு இடையே விளைபொருள்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்