தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயகாந்த்

Published by
லீனா

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும் அதிமுகவும் மேகதாது விவகாரத்தில் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை என விஜயகாந்த் அறிக்கை. 

மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்பட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 39 MPகள் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி,தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அந்த கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் மத்திய நீர் வழித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20ம் தேதி எழுதிய கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கர்நாடகாவின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும் அதிமுகவும் மேகதாது விவகாரத்தில் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை.

மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என்று கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியிடம் திமுக வலியுறுத்த வேண்டும். பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களை, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்வது இது ஒன்றும் புதிதல்ல. அவர் டெல்லி சென்று வருவதால் மட்டும் எந்த பயனும் இல்லை. மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 39 எம்பிக்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களையும் நேரில் சந்தித்து, இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

17 mins ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

2 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

3 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

4 hours ago