[Representative image]
தமிழகத்தில் 4 இடங்களில் தானியங்கி மதுபான வழங்கும் இயந்திரம் அமைக்க நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது .
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ஏடிஎம் மிஷின் போல தானியங்கி மதுபான எந்திரம் நிறுவ உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. மேலும், இது பல்வேறு இடங்களில் நிறுவபட உள்ளது. ‘குடி’மகன்கள் எப்போது வேண்டுமானாலும் நேரடியாக சென்று இயக்கி கொள்ளலாம் என பல்வேறு வதந்திகள் வெளியாகின.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு சார்பில், தமிழ்நாடு மாநில வாணிப கழகம் ஓர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. அதில், அரசு சார்பில் 101 மால்களில் சில்லறை மதுபான விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது .
இதனை கட்டுப்படுத்த முதலில் தற்போது 4 மால்களில் மாட்டு தானியங்கி எந்திரம் மூலம் மது விற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இது 24 மணிநேரமும் திறந்து இருக்காது. டாஸ்மாக் திறந்து இருக்கும் நேரம் மட்டுமே இதுவும் திறந்து இருக்கும். கடைக்கு வெளியே இந்த எந்திரம் இருக்காது . கடைக்கு உள்ளே தான் இருக்கும். பொதுமக்கள் இயக்க முடியாது. கடை பொறுப்பாளர் தான் இதனை இயக்க முடியும். இதன் மூலம் சில்லறை விற்பனைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்கவே இந்த இயந்திரம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…