தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உட்பட 10 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை மருத்துவர், ஆய்வாளர், துப்புரவு பணியாளர்கள் கொண்ட அதிவிரைவு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதகாக கூறிய அவர், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…