மலம் கலந்த விவகாரம்.! வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டி இடிக்க அரசு அனுமதி.! 9 லட்சம் நிதி ஒதுக்கீடு.!
புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் புதிய குடிநீர்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த குடிநீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழக முழுவதும் தற்போதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை செய்தது யார் என சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு புதிய குடிநீர் இணைப்புகளை செய்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மலம் மலம் கலந்த குடிநீர் வந்த குழாய் இணைப்புகளை புதுப்பித்து தருவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. அதேபோல் தற்போது மலம் கலந்த அந்த குடிநீர்தேக்க தொட்டியை இடிப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதனை தொடர்ந்து புதிய குடிநீர்தேக்க தொட்டியை கட்டுவதற்கு 9 லட்ச ரூபாய் நிதியை மாநிலங்களவை உறுப்பினர் எம்எம்.அப்துல்லா தனது எம்பி தொகுதி நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளார். விரைவில் அதற்கான பணிகளும் நடைபெறும் என கூறப்படுகிறது.