ஏ.டி.எம்-இல் தவறவிடும் வைஃபை கார்டுகளை பயன்படுத்தி பல்லாயிரங்களை கொள்ளையடித்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு சின்மயா நகரை சேர்ந்தவர் மனோகரா. இவர் அங்கு இருக்கக்கூடிய ஏ.டி.எம். சென்றுவிட்டு திரும்பும் போது தவறுதலாக அவருடைய வைஃபை கார்டை மறந்து வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த வைஃபை கார்டில் 25,000 பணம் எடுத்திருப்பதாக மனோகராவுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த பணம் எடுக்கப்பட்ட இடத்தினை ட்ராக் செய்ததில், கீழ்ப்பாக்கம் பெட்ரோல் பங் ஒன்றில் கார்ட் தேய்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து பெட்ரோல் பங்கில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் அங்கு ஒரு நபர் அடிக்கடி வந்து வைஃபை கார்டில் தேய்த்து பல ஆயிரங்களை பெற்று சென்றுள்ளார். அந்த கார்ட் வைத்திருந்த நபரின் புகைப்படம் பெட்ரோல் பங் ஊழியர்கள் மூலமாக போலீசாருக்கு கிடைத்துள்ளது. மணிகண்டன் என்ற நபர் இந்த திருட்டை செய்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த நபரை கைது செய்து இவரிடமிருந்து 6 வைஃபை கார்டுகளை பெற்றுள்ளனர் போலீசார்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…