‘StayTuned ‘ – இது போன்ற செய்திகள் தொடர்ச்சியாக வரும் – அண்ணாமலை
திமுகவின் சொத்து குவிப்பு பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலுக்கு பிறகு இது போன்ற செய்திகள் தொடர்ச்சியாக வரும் என அண்ணாமலை ட்வீட்.
திமுக எம்பி ஆ.ராசா 2004 – 2007 காலகட்டத்தில் சுற்றுசூழல் அமைச்சராக பொறுப்பில் இருந்த போது, சுற்றுசூழல் சான்று வழங்க லஞ்சம் பெற்று அதன் மூலம் வந்த பணத்தில் 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுளளது.
இதில் ஆ.ராசா தனது பினாமி பெயரில் வாங்கியதாகவும், இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் எனவும், இந்த சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக வெளியிடவிருக்கும் திமுகவின் சொத்து குவிப்பு பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலுக்கு பிறகு இது போன்ற செய்திகள் தொடர்ச்சியாக வரும்.’ என விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.