சிலைகள் என்பது கலை வடிவம் மட்டுமல்ல – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

வீரபாண்டிய கட்டபொம்மன், மருதிருவர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தேன் பெருமையோடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். 

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களுக்கு ரூ.34 லட்சத்திலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ரூ.18 லட்சத்திலும், ரூ.43 லட்சத்தில் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்ட சிலையும், அவரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சிலைகள் என்பது கலை வடிவம் மட்டுமல்ல; வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் மனிதர்களது வாழ்வையும் தொண்டையும் தியாகத்தையும் எதிர்காலத்துக்கு எடுத்துச்செல்கின்ற சின்னங்கள்! வீரபாண்டிய கட்டபொம்மன், மருதிருவர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தேன் பெருமையோடு!

மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே.பழனிசாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், விடுதலைப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் ஆகியோருக்கு திருவுருவச்சிலைகளுடன் கூடிய அரங்கங்கள் அமைக்க அடிக்கல் நாட்டி – பெருங்காமநல்லூரில் கட்டப்பட்டுள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்தேன். ‘ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்