திருவள்ளுவர் சிலை அவமதிப்பு -தனிப்படை அமைத்து விசாரணை

திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் மீது மர்ம நபர்கள் சாணி பூசினார்கள்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து திருவள்ளுவர் சிலை அவமதிப்பு தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.பின் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.