கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.இந்த விவகாரத்தில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றது.ஆனால் பாஜக மட்டும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த விவகாரம் ஒரு புறம் இருக்க மறுபுறம் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள களியப்பேட்டை என்ற கிராமத்தில் இன்று அதிகாலை பெரியார் சிலையில் மூக்கு, கை பகுதியில் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்ட அறிவிப்பில், தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…