ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் மாநிலம் தழுவிய மாநாடு நடக்கும் – ஓபிஎஸ் அறிவிப்பு
மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம் சென்னையில் ஓபிஎஸ் பேட்டி.
சென்னை பசுமையை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிட்பாக்கெட் அடித்து செல்வது போன்று பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது. எதுவுமே, முறைப்படி இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.
அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இவரை விட சர்வாதிகார அரசியல்வாதி, யாரும் இருக்க முடியாது. எங்களை கட்சியிலிருந்து நீக்கும் தகுதி யாருக்கு இருக்கிறது. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான்.
கட்சி இந்த நிலைமையில் இருக்க நாங்கள் காரணம் இல்லை, யார் காரணம் என மக்களும், தொண்டர்களும் நன்கு அறிவார்கள் என தெரிவித்தார். ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம். எங்கள் பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.