மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.! பாஜக தேசிய செயலாளர் பேச்சு.!
- சிவகங்கை மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார்.
- மத்திய பட்ஜெட் என்பது இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்குமான பட்ஜெட் எனவும், இதில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.
மத்திய அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த சட்டத்தை எதிர்த்து பல அரசியல் காட்சிகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பலதரப்பு மக்கள் அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆங்காகே போராட்டங்கள் கலவர களமாக மாறியது. இதிலும் அந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள். இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மீது தமிழகத்தில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவதாகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து 2020-21க்கான மத்திய பட்ஜெட் என்பது இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்குமான பட்ஜெட் எனவும், இதில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.