ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம் என முதல்வர் பேச்சு.
முன்னாள் அமைச்சர் பெங்களூரு பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் பல பிரச்சனைகள் உள்ளது. அதெல்லாம் இப்போது சொல்லமாட்டேன். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்போம்.
விசாரணை அறிக்கையை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம், பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம். இதைத்ததன் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். ஓபிஎஸ் சமாதானப்படுத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அப்போதைய முதல்வர் இபிஎஸ் அமைத்தார். எனவே, விசாரணை அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதுபோன்று தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டே என கூறியவர் இபிஎஸ் என்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை மீதும் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சி வந்தவுடன் ஆணையத்தை ஒழுங்குபடுத்தி விசாரணை நடைபெற்றது. சட்டமன்றத்தில் திமுக என்னென்ன வாக்குறுதிகள் அளித்தததோ அவைகளை நிறைவேற்றி வருகிறோம் என இவைகளை குறிப்பிட்டு முதலமைச்சர் கூறினார்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…