சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை- அமைச்சர் கடம்பூர் ராஜு..!
அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் செய்தியாளர்கள் கோவில்பட்டியில் பேசினார். அப்போது தீபாவளியையொட்டி வெளியாக உள்ள “பிகில் ” , “கைதி” திரைப்படத்திற்கு ரசிகர்கள் காட்சிக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் தீபாவளியையொட்டி திரையரங்களில் சிறப்புக் காட்சிகள் வெளியிட தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என தெரிவித்தார்.
சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது.
முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும். #TNGovt
— Kadambur Raju (@Kadamburrajuofl) October 23, 2019
அதையும் மீறி சிறப்புக் காட்சிகள் திரையிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்”என பதிவிட்டுள்ளார்