நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் விலகல்.. இதுதான் காரணம்!
நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், அக்கட்சியில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் மீது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிருப்தி தெரிவித்த நிலையில், அக்கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, கடந்த சில தினங்களுக்கு முன் அக்கட்சியிலிருந்து விலகினார்.
இந்தநிலையில், இவரைதொடர்ந்து, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரமும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அக்கட்சியின் ஒருங்கணைப்பாளர் சீமானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
(நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு பகிரி வழியாக அனுப்பப்பட்ட எனது கடிதம்)
விடைபெறுகிறேன்…
Posted by Kalyanasundaram Sanmugam on Thursday, 10 September 2020
அந்த கடிதத்தில், தாம் கடந்த 11 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராகவும், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்ததாகவும், சமீப காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக இனி கட்சியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இக்கடிதம் மூலம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.