காங் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ஈவிகேஎஸ் இளங்கோவன் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ekvs elangovan

சென்னை :காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்று மக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள்.

குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, விசிக தலைவர் திருமாவளவன் , வனத்துறை அமைச்சர் பொன்முடி, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,உள்ளிட்ட பலரும் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள்.

அதை தொடர்ந்து, முகலிவாக்கம் எல் அண்டு டி காலனியில் உள்ள மின்மயானத்தில் மாலை 4 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை செய்ப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் “தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். தன் சிந்தனைக்குச் சரியாகப் பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர்.

அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்