முதலமைச்சர் தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பு.!

Default Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பு.

மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், துணை தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துரையின் முதன்மை செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

உறுப்பினர்களாக மத்திய அரசு பரிந்துரைக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர்.நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார், கே.நவாஸ்கனி ஆகியோரும், மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதுபோன்று சட்டமன்ற உறுப்பினர்களான வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் நா.எழிலன், டி.கே.ஜி. நீலமேகம், மு.பூமிநாதன், ஜெ.எம்.எச. அசன் மௌலானா மற்றும் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva
Amit Shah - Tamilisai Soundararajan
Minister Ponmudi