மாநிலங்களவை இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு.!
மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் ராஜேஷ்குமார், டாக்டர் கனிமொழி சோமு ஹொயோர் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு.
அதிமுகவின் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து 2 பேரும் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்ததை தொடர்ந்து காலியான அந்த இடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்திருந்தது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து, இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. வைத்திலிங்கத்தின் காலியிடத்திற்கு திமுக வேட்பாளர் ராஜேஷ்குமார், கே.பி.முனுசாமியின் காலியிடத்திற்கு திமுக வேட்பாளர் டாக்டர் கனிமொழி சோமு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த 2 இடங்களுக்கும் சுயேச்சை வேட்பாளர் அக்னி ஸ்ரீராமச்சந்திரன், பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், புஷ்பராஜ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் ராஜேஷ்குமார், டாக்டர் கனிமொழி சோமு ஹொயோர் வேட்புமனு ஏற்கப்பட்டதாக சட்டமன்ற பேரவை செயலகம் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சுயேட்சை வேட்பாளர்கள் பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், புஷ்பராஜ் ஆகியோர் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். திமுக கட்சி தவிர வேறு கட்சிகள் எதுவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் ராஜேஷ்குமார் மற்றும் டாக்டர் கனிமொழி ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்கள்.