ஏப்ரல்.6-ம் தேதி வரை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெறாது என அறிவிப்பு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு, இந்தியாவில் மிக தீவீரமாக வருகிறது. இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அணைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஏப்ரல்.6-ம் தேதி வரை வழக்கு விசாரணைகள் நடைபெறாது என்றும், ஆணையத்துக்கு புகார்தாரர்கள், வழக்கறிஞர்கள் நேரில் வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய வழக்குகள் என ஆணையம் முடிவு செய்வதை விசாரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.