மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!
வேட்புமனு பரிசீலனையில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட தேர்தல் அலுவலர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருடனான ஆலோசனையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆணையர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக, முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
வேட்புமனு பரிசீலனையில் எந்தவித விருப்பு வெறுப்புமின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும். வாக்காளர் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் வாக்குச்சாவடி மையங்களில் எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் வாக்குப்பதிவு நடைபெறுவதை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.