தரவரிசை பட்டியலில் 102 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர் என்று அமைச்சர் தகவல்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பதிவு கடந்த மே 15 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் 6ம் தேதி வெளியான நிலையில், தற்போது பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியானது. கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி முதல் ஆக.28 வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வு முடிவு காரணமாக பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை 2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தோம். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்காத காரணத்தால், பொறியியல் கலந்தாய்வு நடத்த தாமதமாகும் எனவும் கூறினார். பொறியியல் தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் நேத்ரா முதலிடம், தருமபுரி ஹரிணிகா 2-ஆம் இடம், திருச்சி ரோஹிணி 3ம் இடம் பிடித்துள்ளார்.
தரவரிசை பட்டியலில் 102 பேர் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்ற 102 பேரில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர். 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 28, 425 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியலில் வழங்கப்பட்டுள்ளது. இதில், சைதாப்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் அமைச்சர் கூறுகையில், 7.5% இட ஒதுக்கீட்டில் கடந்தாண்டை விட கூடுதலாக 5,842 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் படித்து பொறியியலில் சேர்ந்த 13,284 பேர் புதுமை பெண் திட்டத்தில் பயனடைகின்றனர். அரசு பள்ளியில் படித்த 15,136 ஆண்கள், 13,284 பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பொறியியல் படிப்பு படிக்கவுள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும், மாநில கல்வி கொள்கை வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…