#BREAKING: மாநில வளர்ச்சி கொள்கைக் குழு- முதல்வர் ஆலோசனை..!

Default Image
  • மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
  • மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் நியமிக்கப்பட்ட துணை தலைவர் ஜெயரஞ்சன் உட்பட 9 பேர் கொண்ட குழுயுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

சமீபத்தில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசனும், துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மருத்துவர் சிவராமன், டிஆர்பி ராஜா உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினராக நியமனம் செய்யபப்ட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் நியமிக்கப்பட்ட துணை தலைவர் ஜெயரஞ்சன் உட்பட 9 பேர் கொண்ட குழுவுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்