தொடங்கியது அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று முதல் வருகின்ற 13-ஆம் தேதி வரை காலை ,மாலை என இரு வேளைகளில் அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில்,சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய கழக செயலாளர்கள்,நகர செயலாளர்கள் மற்றும் மாநகராட்சிகளை சேர்ந்த பகுதி கழக செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.இன்று காலை நடைபெறும் இந்த கூட்டத்தில் கரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ,எதிர் வர உள்ள நகராட்சி,மாநகராட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.