சற்று நேரத்தில் மருத்துவ கலந்தாய்வு ! மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தொடக்கம்.!
சற்று நேரத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்க உள்ளது.
சென்னையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வானது சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கலந்தாய்வில் முதல் 3 நாட்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு மற்றும் பொதுக்கலந்தாய்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், தரவரிசை பட்டியலில் 951 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.