75% தொழிலாளர்களுடன் ஐசிஎஃப் தொழிற்சாலையில் பணி துவக்கம்!
ரயில் பெட்டிகள் இணைக்கும் தொழிற்சாலையில் 75 சதவீத ஊழியர்களுடன் ரயில் பெட்டி தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் காணப்படும் கொரானா வைரஸ் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட தளர்வாக சில தொழிற்சாலைகளில் 75% ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.
தினமும் அங்கு பயணிகளின் தேவை மற்றும் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அதிநவீன ரயில்பெட்டிகள், சுற்றுலா மற்றும் ராணுவத்துக்கான ரயில் பெட்டிகள் என 50 வகைகளில் 600 வடிவமைப்புகள் கொண்ட பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஊரடங்கால் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மே மாதம் முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். தற்போது 75 சதவீத ஊழியர்கள் பணியாற்ற அனுமதி அளித்துள்ளாதால், இனிவரும் நாட்களில் தினமும் 10 பெட்டிகள் தயாரிக்க முடியும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.