இன்று தொடங்குகிறது அக்கினி நட்சத்திரம். வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
பொதுவாக கோடைகாலம் தொடங்கி விட்டாலே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக தான் காணப்படும். அந்த வகையில், தமிழகத்தை பொறுத்தவரையில், அக்கினி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பதாக, சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து தான் வருகிறது.
ஏற்கனவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், இன்று காலை 8:57 மணிக்கு அக்கினி நட்சத்திரம் துவங்கவுள்ளது. இந்த அக்கினி நட்சத்திரம் தொடர்ந்து 24 நாட்களுக்கு நீடித்து, வரும் 28-ம் தேதி பகல் 1:51 மணியளவில் நிறைவடைகிறது.
இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து அதிகமான மக்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்புள்ளது. எப்படியென்றால், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வழக்கத்தை விட, வெளியில் நடமாடும் மக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் மக்களின் நடமாட்டம் குறைவாக தான் இருக்கும்.
இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து, நாம் தப்பித்து, நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், அதிகமாக வெளியில் வராமல் இருக்க வேண்டும். மேலும், உடலில் நீர்சத்து வற்றி போகாமல் இருக்க, நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…