இறுதிநாளில் படையெடுத்த நட்சத்திர வேட்பாளர்கள்...

Election2024 : இறுதி நாளான இன்று பல்வேறு நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

Kalanidhi Maran - A Rasa - K Annamalai

Election2024 :இறுதி நாளான இன்று பல்வேறு நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இன்று பிற்பகலுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று பல்வேறு நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

விசிக தலைவர் தொல்திருமாவளவன், சிதம்பரம் (தனி)மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை அளித்தார்.

திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், மத்திய சென்னைமக்களவை தொகுதி அலுவரிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

பாஜக மாநில தலைவர்அண்ணாமலை, கோவைமக்களவை தொகுதி தேர்தல் அலுவலரிடத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

புதுச்சேரியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்வைத்தியலிங்கம்வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் வேட்பாளர்விஜய் வசந்த், கன்னியாகுமரிமக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நீலகிரி (தனி)மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர்ஆ.ராசாவேட்புமனு தாக்கல் செய்தார்.

தேனிமக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்தங்க தமிழ்ச்செல்வன்இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

தேனிமக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்டி.டி.வி.தினகரன்வேட்புமனு தாக்கல் செய்தார்.

அரக்கோணம்மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்ஜெகத்ரட்சகன்இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

கோவைமக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கணபதி ராஜ்குமார்வேட்புமனு தாக்கல் செய்தார்.