” தம்பி ஸ்டாலின் உங்களுடன் இருப்பேன் ” வைகோவை அழவைத்த ஸ்டாலினின் உரை…!!
- கருணாநிதியின் மறைவை அனுசரிக்கும் வகையில் தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .
- தம்பி ஸ்டாலின் உங்களுடன் இருப்பேன் என்று ஸ்டாலின் பேசியதை கேட்டு வைகோ கண்கலங்கினார்.
கருணாநிதியின் மறைவை அனுசரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு திராவிட இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன. அந்த வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் திருச்சியில் கருணாநிதியின் தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது . இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய ஸ்டாலின் தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தை காப்பாற்றுவதற்காக இந்த இனத்தை காப்பாற்றுவதற்காக இந்த மொழியை காப்பாற்றுவதற்காக இந்த தமிழகத்தை காப்பாற்றுவதற்காக வாழ்நாள் முழுவதும் தம்பி ஸ்டாலினுக்கு உங்களுடன் இருப்பேன் என்று தெரிவித்தார்.மேலும் ஸ்டாலின் கூறுகையில் அண்ணன் வைகோ அவர்களே நீங்கள் எனக்கு துணையாக இருப்பது மட்டுமல்ல நான் உங்களுக்கு இருப்பேன் அதற்காகத்தான் இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன் என்று வாக்குறுதி வழங்குவதற்காகத்தான் இந்த விழாவிற்கு வந்து இருக்கிறேன் என்று உணர்ச்சி வசத்துடன் ஸ்டாலின் பேசியதை கேட்ட வைகோ கண்கலங்கினார்.