நேரு குறித்து அவதூறு பேச்சு: ‘இது போல் மீண்டும் நடக்காது’… மன்னிப்புக் கேட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன்!

ஜவஹர்லால் நேரு தொடர்பாக அவதூறு பேசிய கேட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன் பரத் பாலாஜி மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

JawaharlalNehru ISSUE

சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி  என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி என்பவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நேரு தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் காமெடி செய்த பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில், நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக ‘ஸ்டாண்ட் அப் காமெடியன்’ பரத் பாலாஜி என்பவர் கடிதம் மூலமாகவும் வீடியோ வாயிலாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோவில் பேசும் பரத் பாலாஜி, “எனது சமீபத்திய வீடியோ ஒன்று தற்செயலாக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நான் நீக்கிவிட்டேன். இது கவனக்குறைவாக இருந்தது, பண்டித ஜவஹர்லால் நேரு மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். இது போல் மீண்டும் நடக்காது” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்